
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 35க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இந்த தகவல் அறிந்து வேதனை அடைந்ததாக தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் தன்னுடைய எக்ஸ் களத்தில் பதிவிட்டுள்ளார். அதில் உயிரிழந்தவர்களுடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் .முழு உடல் நலம் பெற வேண்டுகிறேன்.
கடந்த வருடம் இதே நிகழ்வு காரணமாக பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தை இது காட்டுகிறது. இது போன்ற சம்பவம் நிகழாத வண்ணம் இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.