கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 2 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தினகரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விஜயா, தாமோதரன், கோவிந்தராஜ் உள்ளிட்ட 10 பேர் மீது கவத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதில் முக்கிய குற்றவாளியான சின்னதுரை என்பவரை தீவிரமாக தேடி வருகிறார்கள். அதே போல் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே 75 பேர் உடல் நலம் பாதித்து சேலம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.