தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜயுடன் கூட்டணி வைத்த அட்லீ தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் முடிவடைந்த பிறகு நடிகர் அட்லீ ஏகே 63 படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.

ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் தற்போது 4-வது முறையாக விஜய் உடன் தான் அட்லீ கூட்டணி வைக்கப் போவதாக தகவல் வந்துள்ளது. அதன்படி தளபதி 68 திரைப்படத்தை அட்லீ இயக்குவார் என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.