தென்காசி அருகே உள்ள தனியார் பள்ளியில், 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் பள்ளி நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதாவது தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் சிமியோன். கிறிஸ்தவ மத பாதிரியாரான இவர், அப்பகுதியில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அவருடைய மகன் லிவி (28) அதே பள்ளியில் நிர்வாகியாக பணியாற்றி வந்தார்.
சமீபத்தில், 12 வயதுடைய 8-ம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளிக்கு வந்தபோது நிர்வாகி லிவி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது பற்றி மாணவியின் தாயார், தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, லிவியை கைது செய்தனர். அவர்மீது போக்சோ சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், குற்றவாளி லிவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் குழந்தைகளுக்கு பள்ளியிலேயே பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது பெரும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது.
