சென்னை மாவட்டம் வண்டலூர் அருகே தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ராஜேஷ் குமார் என்ற 45 வயது நபர் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த மாதம் திருமணமான நிலையில், கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பமானதால் அவர் கருக்கலைப்பு செய்துள்ளார்.

அதாவது ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்த நிலையில் அந்த மாணவிக்கு ரத்தப்போக்கு அதிகமாகவே உயிருக்கு ஆபத்தாக முடிந்தது. இப்போது மிகவும் ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பேராசிரியரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.