ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மனைவி மன்சௌரே கோஜஸ்தே குறித்த செய்திகளில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கமேனியுடன் சேர்ந்து அவரது மனைவியும் கொல்லப்பட்டுவிட்டதாகப் பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், மன்சௌரே உயிருடன் இருப்பதாக ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி (IRGC)  ‘ஃபார்ஸ் நியூஸ்’ தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது.

ஈரானின் புதிய உச்சத் தலைவராகப் பதவியேற்றுள்ள மொஜ்தபா கமேனி, தனது முதல் உரையில் தாயாரின் மரணம் குறித்து எவ்விதத் தகவலையும் வெளியிடாதது சந்தேகங்களை எழுப்பிய நிலையில், அவர் உயிருடன் இருக்கும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது. 1964-ல் அலி கமேனியை மணந்த மன்சௌரே, ஆறு குழந்தைகளின் தாயாவார்; தற்போது அவரது மகன் மொஜ்தபா ஈரானை வழிநடத்தி வரும் சூழலில், மன்சௌரேவின் உயிர் குறித்த இந்தத் தகவல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.