சேலம் மாவட்டம் குட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி(60). இவரது கணவர் இறந்துவிட்டார். இவர்களது பிள்ளைகள் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். சரஸ்வதி ஆடு, மாடு மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தார்.

கடந்த 20-ஆம் தேதி ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்ற சரஸ்வதி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது மர்ம நபர்கள் மூதாட்டியை கொன்று காது மற்றும் மூக்கை அறுத்து சரஸ்வதி அணிந்திருந்த நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கட்டிக்காரனுரை சேர்ந்த நரேஷ் குமார் என்பவர் மூதாட்டியை கொலை செய்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.