
ரஷ்யாவைச் சேர்ந்த யூலியா மினினா என்ற பெண்ணின் வெள்ளை செல்லப் பூனை இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. ஓநாய் அளவில் பெரிதாக இருக்கும் இந்த பூனைக்கு ‘கேஃபிர்’ என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. மைனே கூன் பூனை வகைகள் இயற்கையாகவே மிகப் பெரியவை. ஆனால் கேஃபிர் இன்னும் அதிகமாக பெரிய உருவத்தை கொண்டுள்ளது.
உரிமையாளர் யூலியா சமூக ஊடகங்களில் கேஃபிரின் குறும்புகளின் வீடியோக்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அதன் மூலம், சமூக வலைதளங்களில் கெஃபிருக்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.