தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ‘கருப்பு’ திரைப்படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
படத்தின் பெயருக்கேற்றார் போல மிக அடர்த்தியான ஒளிப்பதிவு மற்றும் மர்மம் நிறைந்த காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த ட்ரெய்லர், ரசிகர்களுக்கு ஒரு தரமான த்ரில்லர் அனுபவம் காத்திருப்பதை உறுதி செய்துள்ளது.
படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிரட்டலாக செதுக்கப்பட்டுள்ள நிலையில், பின்னணி இசை காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு வித்தியாசமான கதைக்களத்தோடு வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
தற்போது யூடியூப் உள்ளிட்ட தளங்களில் ட்ரெண்டாகி வரும் ‘கருப்பு’ ட்ரெய்லர், கோலிவுட் வட்டாரத்தில் ஒரு ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
