பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்கள், இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பித் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) அவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாரியத்தின் அனுமதியின்றித் தொடரிலிருந்து வெளியேறும் வீரர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்தியது. இதைத் தொடர்ந்து, வீரர்கள் மிகுந்த பாதுகாப்புடன் பாகிஸ்தானில் தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், வீரர்களின் கவலைகளைத் தணிக்கும் விதமாக, பாகிஸ்தான் அரசு அவர்களுக்கு உயரிய பாதுகாப்பை வழங்கியுள்ளதுடன், ராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படைகள் வீரர்களை ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு அழைத்துச் செல்வது போன்ற உயர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
No.. It’s not Donald Trump in Pakistan. It’s Sri Lanka Cricket team returning to hotel from an optional practice session at Rawalpindi. #PAKVSL
pic.twitter.com/CgfaX0TJXv— Nibraz Ramzan (@nibraz88cricket) November 14, 2025
“>
இதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
