தமிழகத்தில் மட்டும் மொத்தம் மூன்று கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை மின் வாரியமானது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கெடுத்து அதற்கான கட்டணத்தை வசூல் செய்து வருகிறது .குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணத்தை  செலுத்தாத மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகின்றது. அதற்கான அபராத தொகையும் வசூலிக்கப்படுகிறது. இந்த விதிமுறை மாற்றி அமைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் அதற்கான விதிமுறை மாற்றம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சமீபத்தில் நடந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தாரில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடந்து முடிந்ததும் மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கெடுக்கும் நடைமுறை அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி இருந்தார். இதற்காக முதல் கட்டமாக ஒரு கோடி வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு பரிசோதிக்கும் முறையில் மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கிடப்பட உள்ளது. அதனால் வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கெடுக்கும் நடைமுறையை செயல்படுத்த அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.