மிதுனம் ராசி அன்பர்களே

இந்த நாள் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். பார்த்துக் கொள்ளுங்கள். இன்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். சக பணியாளர்களால் நல்லது நடக்கும்.

இன்று  பாராட்டுக்கள் கிடைக்கும். உற்சாகம் மிகுந்த நாளாக இருக்கும். சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் உங்களை மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். மனம் விட்டு அனைவரிடமும் பேசுவீர்கள். எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள் என்று சொல்லலாம். முன் கோபத்தை விட்டு விடுவது நல்லது .

இன்று பெண்கள் உற்சாகமாக பணிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.. இன்று மாணவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள் பெரியவர்களுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். வீட்டிற்கு தேவையானதை செய்து கொடுப்பீர்கள். கல்வியில் முழு அக்கறை இருக்கும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்  : 5 மற்றும் 6

அதிஷ்ட நிறம்  :  சிவப்பு மற்றும் நீல நிறம்