மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று அடுத்தவர்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வது நல்லது. சாதுரியமாக பேசி சாதிக்க முடியும். சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்கள். தாயின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். குழப்பங்கள் அவ்வப்போது வந்து செல்லும்.

எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவிப்பீர்கள். குடும்பத்தில் கலந்தாலோசித்து முடிவு எடுப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். மனதில் இருந்த சஞ்சலங்கள் மாறும். மனநிலையில் மாற்றம் ஏற்படும். பண நெருக்கடி குறையும். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். அரசு மூலம் லாபம் இருக்கும்.

இன்று பெண்கள் கோபமான மனநிலையில் காணப்படுவீர்கள். பணி சுமை அதிகமாக இருக்கும். தைரியமாக எதையும் செய்ய வேண்டும். யோசித்து எந்த செயலிலும் ஈடுபட வேண்டும். கல்வியில் முழு ஈடுபாடு வேண்டும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6, 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்