ரேபிடோ பைக் டேக்ஸி சேவை மூலம் பிரபலமான நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் உணவு டெலிவரி சேவையிலும் களமிறங்க முடிவு செய்து அதற்காக OWNLY என்ற செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் பெங்களூரில் இந்த சேவை தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களும் பயன்படுத்தும் வகையில் குறைந்த கட்டணம் மற்றும் வெளிப்படை தன்மையுடன் இந்த சேவை செயல்படுத்தப்படும் என ரேபிடோ நிறுவனம் அறிவித்தது.

100 ரூபாய்க்கு குறைவான உணவை வாங்கினால் டெலிவரி கட்டணமாக வாடிக்கையாளர்களிடமிருந்து 20 ரூபாய், ஹோட்டல்களில் இருந்து 10 ரூபாய் வசூல் செய்யப்படும். நூறு ரூபாய்க்கு மேல் உணவு வாங்கினால் 25 ரூபாய் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது சந்தையில் உள்ள மற்ற டெலிவரி சேவைகளை விட மிக குறைவான கட்டணமாகும்.