நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சில வருடங்களுக்கு முன்பாக மீனாவின் கணவர் உயிரிழந்தார். அதிலிருந்து வெளியே வந்து தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தன்னை பற்றி பேசப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில் நிலையான உள் போராட்டத்தை அனுபவித்து வருகிறேன். மிகவும் வலியை உணர்கிறேன். ஆனால் நீங்கள் என்னை பார்க்கும் போது நன்றாக இருப்பது போல் தோன்றும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் வெறுப்பவர்கள் வெறுப்பவர்களாகவே இருப்பார்கள் என்றும் முட்டாள்கள் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.