நடிகை நயன்தாரா செம்பருத்தி டீ பற்றி ஒரு பதிவை இன்ஸ்டாவில் வெளியிட்டார். செம்பருத்தி டீ டயபெடிக்ஸ், ஹை கொலஸ்ட்ரால், ஹை பிளட் பிரஷர் மற்றும் இதய கோளாறுகள் போன்றவற்றை சரி செய்ய உதவும் என நயன்தாரா பதிவிட்டு இருக்கின்றார். அதற்கு ட்விட்டரில் லிவர் டாக் என்ற ஒரு மருத்துவர் இது நிரூபிக்கப்படாத ஒன்று என குறிப்பிட்டு நீண்ட பதிவை போட்டார். இந்த பதிவு விவகாரம் இணையத்தில் சர்ச்சையானது.
இந்நிலையில் நயன்தாரா அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் போஸ்ட் போட்டிருக்கின்றார். “முட்டாள்களிடம் விவாதம் செய்யாதே, உங்களை அவர்கள் மட்டமான நிலைக்கு இழுத்துச் சென்று அவர்களின் அனுபவத்தால் தோற்கடித்து விடுவார்கள்” என நயன்தாரா கோபமாக பதிவிட்டு இருக்கின்றார். மேலும் செம்பருத்தி டீ எப்படி செய்ய வேண்டும் என்ற ஒரு பதிவையும் போட்டு இருக்கின்றார்.
