
உலகின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் மக்கள் நொடிக்கு நொடி தங்களுக்கு வேண்டியவர்கள், நண்பர்களுக்கு தேவையான தகவல்களை பகிர்ந்து கொள்ள whatsapp பெரும் பங்காற்றி வருகிறது. இதேபோல் செய்திகளை பரப்பி கொள்ள ஆயிரக்கணக்கான செயலிகள் இருந்தாலும் பாதுகாப்பின் அடிப்படையில் whatsapp தான் முன்னிலை வகித்து வருகிறது.
தற்போது இதில் தவற விடப்பட்ட நம்பருக்கு உடனடியாக கால் செய்து கொள்ள வசதியாக மிஸ்டுகால் அறிவிப்பின் பக்கத்திலேயே கால் பேக் என்ற வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியானது குறிப்பிடப்பட்ட பயனாளர்களுக்கு மட்டும் சோதனை முறையில் கிடைத்தது. சோதனைப் பணிகள் முடிவடைந்த பிறகு இந்த வசதி அனைவருக்குமே கிடைக்கும் என்று மெட்டா நிர்வாகம் சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.