இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளிலும் செல்போன் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு உலகம் நவீனமயமாகி விட்டது. செல்போன் மூலம் உலக நடப்புகளை மட்டும் அல்லாமல் சமையல் உட்பட நமக்கு என்னென்ன தேவையோ அதை யூடியூபில் எளிதில் தெரிந்துகொள்ள முடிகிறது. அந்த அளவிற்கு  பலரும் யூடியூப் வலைதளத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை வீடியோக்களாக தொகுத்து யூடியூப் சேனல் தொடங்கி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கிறது.

இந்நிலையில் யூடியூப் சேனல் மானிடைசேஷன் ஆவதற்கு புதிய விதிமுறைகளை யூடியூப் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, இனி 500+ சப்ஸ்கிரைபர்ஸ், ஒரு வருடத்தில் 3000 Watch Hours தேவை (அ) 30 லட்சம் ஷார்ட்ஸ் வீடியோ பார்வைகள், கடைசி 90 நாட்களில் 3 வீடியோக்கள் அப்லோடு ஆகியிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக, 1,000 சப்ஸ்கிரைப்பர்ஸ், ஒரு வருடத்தில் 4000 Watch Hours (அ) 30 லட்சம் ஷார்ட்ஸ் வீடியோ பார்வைகள் தேவைப்பட்டது