முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் மதுரையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் பங்கேற்றனர். இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். இந்த திட்டமானது தமிழ்நாடு அறிவிக்கக்கூடிய திட்டத்தை மக்களுக்கு நேரடியாக காலதாமதம் என்று விரைவாக கொண்டு சேர்ப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளை நேரடியாக சந்தித்து திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தான் இந்த கள ஆய்வில் முதல்வர் திட்டம்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் CM ஸ்டாலின் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். மக்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் சான்றிதழ்களை வழங்க வேண்டும். பட்டா திருத்தம் கோரி மனு அளித்தால் விரைந்து நிறைவேற்ற வேண்டும். சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் தேவைகளை அறிந்து கடமையாற்ற வேண்டும். அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார்.