வாழ்க்கையில் தோல்வி என்பது முடிவல்ல, அது வெற்றிக்கான ஒரு படி என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து இரண்டு முறை தோல்வியடைந்த மாணவர் ஒருவர், தனது மூன்றாவது முயற்சியில் விடாமுயற்சியுடன் படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

மேலும் வழக்கமாக மதிப்பெண்கள் குறைவாக எடுத்தாலே பெற்றோர்கள் கண்டிக்கும் நிலையில், இந்த மாணவனின் தந்தை தனது மகனின் இந்த சிறிய வெற்றியைப் பெரிய அளவில் கொண்டாட முடிவு செய்தார். மகனின் விடாமுயற்சியைப் பாராட்டும் விதமாக, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான விருந்தை அவர் ஏற்பாடு செய்திருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Anuj Tripathi (@backtravel12)

“>

இந்தக் கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக, விருந்தினர்களுக்கு விலையுயர்ந்த ‘ஸ்டார்பக்ஸ்’ (Starbucks) காபி ஸ்டால்களை அமைத்து ஒரு மிகப்பெரிய “கிராண்ட் பார்ட்டி” கொடுத்துள்ளார் அந்தத் தந்தை. “தோல்வி அடைந்தபோது சோர்ந்து போகாமல், மீண்டும் முயன்று வெற்றி பெற்ற மகனின் மனதிடம் எனக்குப் பெருமை அளிக்கிறது” என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதனால் தோல்வியைச் சுமையாகக் கருதாமல், அதை ஒரு திருவிழாவாக மாற்றிய இந்தத் தந்தையின் செயல், இன்றைய போட்டி நிறைந்த உலகில் மதிப்பெண்களை விட மனநலமும் ஊக்கமும் முக்கியம் என்பதைப் பலருக்கு உணர்த்தியுள்ளது. இந்த வைரல் வீடியோ தற்போது இணையத்தில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.