
சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பிக்கு முக்கிய காரணம் நடிகர் மாரிமுத்து தான். குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்தது. அதைவிட இந்தமா ஏய் என்று அவர் கூறும் வார்த்தை தான் ஹைலெட். இவர் நடிகராவதற்கு முன்பாக துணை இயக்குனராக ராஜ்கிரன், மணிரத்தினம், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலருடன் பணியாற்றி இருக்கிறார். இவர் கடைசியாக ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார். இந்நிலையில், மாரிமுத்து மறைவுக்கு x தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ள ரஜினிகாந்த், மாரிமுத்து ஒரு அருமையான மனிதர் என்றும் அவருடைய இறப்பு தனக்கு அதிர்ச்சியளிப்பதாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு தன்னுடைய மனமார்ந்த அஞ்சலியை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.