மாமூல் வாங்கித் தின்று வயிறை வளர்க்கத்தான் காவல்துறையும், அரசும் இருக்கிறதா? என்று ‘மேற்குத்தொடர்சி மலை’ படத்தின் இயக்குநர் லெனின் பாரதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்து 33 பேர் உயிரிழ ந்தார்கள். இந்த  நிலையில், இது குறித்து X தளத்தில் லெனின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில், கடந்த வருடம் கள்ளச்சாராயத்திற்கு செங்கல்பட்டு, விழுப்புரம் என 20 பேருக்கு மேல் பலியானார்கள். இப்போது கள்ளக்குறிச்சியில் 29 பேர் பலி. வருடந்தோறும் இப்படி மக்களை பலிகொடுத்து மாமூல் வாங்கித் தின்று வயிறு வளர்க்கத்தான் காவல்துறையும், அரசும் இருக்கிறதா..? என்று கடுமையாக சாடியுள்ளார்.