பீகார் மாநிலத்தில் உள்ள போஜ்பூர் மாவட்டத்தில் 12 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனது மாமா வீட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது சிறுமியின் மாமா அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தார். இதனையடுத்து சிறுமியின் உடலை கட்டிலில் கட்டி வைத்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சிறுமியின் மாமா வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது கட்டிலில் சிறுமி சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.