
திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட் அருகே உள்ள வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான சுரேஷ் (40) நேற்று இரவு காந்தி மார்க்கெட் பகுதியில் டீ சாப்பிடுவதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கு வந்த அவருடைய மைத்துனர் சந்திரகுமாருக்கும் சுரேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது சந்திரகுமார் கத்தியால் சுரேஷை குத்தியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஒன்று சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.