மாமன்னன் படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஏஞ்சல் என்ற படத்தை முடித்துக் கொடுக்காமல் உதயநிதி ‘மாமன்னன்’ படத்தில் நடித்துள்ளதாக ராம சரவணன் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.  மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் உதயநிதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் பதில் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஓ டி எஸ் ஃபிலிம்ஸ் உரிமையாளர் ராமசரவணன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.