டைரக்டர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் “மாமன்னன்”. இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து உள்ளார். அதோடு இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மாமன்னன் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

அண்மையில் இப்படத்தின் முதல் பாடலான “ராசா கண்ணு” பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. வடிவேலு பாடி இருக்கும் இந்த பாடல் சமூகவலைதளத்தில் வைரலாகியது. இந்நிலையில் மாமன்னன் படத்தின் அடுத்த பாடலான “ஜிகு ஜிகு ரெயில்” லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. அதோடு இந்த வீடியோவில் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற ஜூன் 1-ம் தேதி நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.