இந்தியர்களுக்கு சென்ற 1947ம் வருடம் சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் அடிப்படையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. புது பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் இந்த செங்கோலானது நிறுவப்பட்டது.

இந்த நிலையில் புது பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது பற்றி டைரக்டர் சீனு ராமசாமி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். அதாவது, “தமிழ் செம்மொழிக்கு மத்திய அரசின் கட்டிடம் தந்தீர். இன்று இந்தியாவின் புது பாராளுமன்றத்தில் சங்க காலம் போற்றிய நீதியின் அடையாளம் செங்கோலை போற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே உலகத்திற்கு செங்கோல் வழியாக தாய்மொழியை போற்றும் தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர் பெரிய விசயம்” என்று பதிவிட்டுள்ளார்.