இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தின் உண்மையான மாமன்னன் முன்னாள் சபாநாயகர் தனபால் தான் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பேசிய தனபால், மாமன்னன் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. என் உழைப்பிற்கு அமைப்புச் செயலாளர்,அமைச்சர் மற்றும் சபாநாயகர் பொறுப்புகளை வழங்கினார் ஜெயலலிதா.

மாமன்னன் திரைப்படம் என்னுடைய சாயலில் வெளிவந்திருந்தால் அது அம்மாவுக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து உள்ள இந்த திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.