தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அப்போது கேள்வி நேரத்தில் போது திருவாலங்காடு கோவிலில் மாந்திரீக பூஜை செய்ய போதிய இடவசதி இல்லை என்றும் பொது இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ கூறினார். அப்போது குறிக்கிட்ட ஓபிஎஸ் அமைச்சர் சேகர்பாபு இந்த கேள்விக்கு பதில் அளிப்பாரா என நகைச்சுவையாக கேட்டார்.

இதைக் கேட்டவுடன் எடப்பாடி பழனிச்சாமி குலுங்கி குலுங்கி சிரித்தார். பின்னர் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ பரிகார பூஜையை தான் தவறுதலாக மாந்திரீக பூஜை என்று கூறிவிட்டேன் என்றார். பின்னர் பேசிய அமைச்சர் சேகர்பாபு மாந்திரீகம் பற்றி ஓ பன்னீர்செல்வத்திற்கு தெரியாதது ஒன்றுமில்லை. ஆன்மீகவாதியான ஓ பன்னீர்செல்வம் பல கோவில்களுக்கு சென்று வழிபடுவார் என்ற நகைச்சுவையாக கூறினார். மேலும் இந்த விவாதத்தின் போது அவையில் சிரிப்பலை எழுந்தது.