மற்ற நாடுகளில் இருப்பது போல இந்தியாவிலும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் கருத்து தெரிவித்த நீதிபதி சந்திரசூட் “இப்படி விடுமுறை வழங்கினால் பெண்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படும். நிறுவனங்கள் அவர்களை வேலைக்கு பணியமர்த்த தயங்கலாம்” என்று கூறியுள்ளார்.

மேலும் இவ்வழக்கு கொள்கை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் மத்திய அரசை அணுகலாம் எனவும் தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார். மற்ற நாடுகளைப் போன்று இந்தியாவிலும் மாதவிடாய் விடுப்பு வழங்கவேண்டும் என்ற வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.