இன்றைய காலகட்டத்தில் முதலீடு செய்பவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை இப்போதிலிருந்தே சேமிக்க தொடங்கி வருகிறார்கள். குழந்தைகளுடைய கல்வி, திருமணம் என பல காரணத்திற்காக முதலீட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் வங்கியில் மூத்த குடிமக்களுக்கு மாத வருமானம் கொடுக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று அமலில் உள்ளது. அதாவது 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள தனிநபர்கள் SCSS திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.

முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஆயிரம் முதல் 15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலமானது ஐந்து வருடங்கள் ஆகும். முதிர்வு காலத்திற்குப் பிறகு விருப்பப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை இந்த திட்டத்தை நீட்டித்துக் கொள்ளலாம். வருடத்தில் இந்த திட்டத்திற்கு 8.2% வருடாந்திர வட்டியானது வழங்கப்பட்டு வருகிறது. 30 லட்சத்தை மொத்தமாக இந்த திட்டத்தின் முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு காலாண்டிலும் 8.2% வட்டி வீதத்தில் 61,500 வழங்கப்படுகிறது. அப்படியென்றால் மாதம் தோறும் 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.