தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த 14ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு தொடர்ந்து 6 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் தொடர் விடுமுறை. அதாவது பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள் விடுமுறை வந்த நிலையில் இடையில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அறிவித்தது. இதன் காரணமாக சனி ஞாயிறு சேர்த்து மொத்தம் 6 நாட்கள் விடுமுறை. அதோடு சில மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்களும் விடுமுறை வந்திருந்தது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் அவர்கள் மீண்டும் ஊருக்கு செல்ல வசதியாக பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் திறக்கப்படுகிறது. மேலும் விடுமுறை முடிவடைந்ததால் மாணவர்கள் அனைவரும் இன்று வழக்கம் போல் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.