தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவடைந்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பில் எட்டு மாணவ மாணவியர் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஜூன் 14ல்  அரசு சார்பாக பாராட்டு விழா நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பட்டியலில் உள்ளவர்கள் தவறாமல் கலந்து கொள்வதை உறுதி செய்திட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். 12 ஆம் வகுப்பில் மட்டும் தமிழ் பாடத்தில் 35 மாணவ மாணவிகள் 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்று சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.