
முதுநிலை பட்டப் படிப்பிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023 -24 -ஆம் ஆண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்புகளில் முதலாம் ஆண்டு மாணாக்கர் சேர்க்கை 14.08.2023 -இல் துவங்கி www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக இளநிலை பாடப்பிரிவிற்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், முதுநிலை பட்டப் படிப்பிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் 01.09.2023 வரை நீட்டிக்கப்படுகிறது.
உயர்கல்வித் துறை – செய்தி வெளியீடு#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin @KPonmudiMLA @mp_saminathan pic.twitter.com/DQd5zFrSLN
— TN DIPR (@TNDIPRNEWS) August 16, 2023