
தமிழகத்தில் பெங்கல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஆனால் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற தாமதமாகி வருகிறது. இதன் காரணமாக நேற்று விடுக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டிற்கான ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டது.
இதன் காரணமாக நாகை மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த விடுமுறையை திரும்ப பெற்றுள்ளனர். மேலும் இதன் காரணமாக இன்று நாகை மாவட்டத்தில் வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.