மத்திய அரசானது  மாணவர்களுடைய கல்வி மேம்பாட்டுக்காக பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் ஒருங்கிணைந்த சமக்ர சிக் ஷா கல்வி திட்டத்தின் கீழ் தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் வழி கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் என்ற நவீன டிஜிட்டல் வழி வகுப்புகளுக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்திற்காக கிராமப்புறங்களில் இணைய இணைப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பணிகள் ஜூன் மாதத்திற்கு நிறைவு பெற உள்ளது. அதன் பிறகு புதிய கல்வி ஆண்டில் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அனிமேஷன் வகை வீடியோக்களை பாடங்களாக நடத்துவதற்கு தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கான பாடங்கள்  மணற்கேணி  என்ற செயலில் இருப்பதாகவும் அதை  பதிவிறக்கம் செய்து பாடத்தை நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.