தமிழகத்தில் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டம் மூலமாக பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் சீர் மரபின பழங்குடியினத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த திட்ட மூலம் உதவித்தொகை வழங்கப்படும். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாய், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இதில் விருப்பமுள்ள மாணவர்கள் இணையதள முகவரியில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11ஆம் வகுப்பு படிக்க வேண்டும் எனவும் விண்ணப்பத்தாறின் குடும்ப ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் எனவும் விண்ணப்பத்துடன் வங்கி கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் போன்ற ஆவணங்களை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.