சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு நீட் மற்றும் ஜே இ இ உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக அகாதெமி ஆப் ஸ்டெம் எக்சேலன்ஸ் என்ற பயிற்சியை மேயர் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் சிறந்த மாணவர்களை பொது தேர்வு மூலமாக தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நேரடியாகவும் இணையதளம் மூலமாகவும் நடைபெறும் போட்டி தேர்வுகளுக்கு இதன் மூலம் பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தங்கும் விடுதியுடன் கூடிய தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சி வழங்கப்படும். மேலும் அவர்கள் பள்ளிக்குச் சென்று வர ஏதுவாக போக்குவரத்து வசதி, மெய்நிகர் வகுப்பறை மற்றும் கையடக்க கணினி, எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட நூலக வசதியுடன் அனுபவிக்க ஆசிரியர் குழுக்களால் பயிற்சி வழங்கப்படும். இதனை செயல்படுத்தும் விதமாக சென்னை நுங்கம்பாக்கம் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி நடைபெறும் கட்டிடத்தை நேற்று மேயர் ப்ரியா தொடங்கி வைத்தார்.