ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பள்ளியில் நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் பின்னால் இருந்த சக மாணவனிடம் பேசியதற்காக அவனது ஆசிரியர் சம்பு தயால் என்பவர் கன்னத்தில் அறைந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆசிரியர் கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட் மாணவனின் முகத்தில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ரத்தம் கொட்டிய நிலையில் மாணவனை சக மாணவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு நான்கு தையல் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவனின் தந்தை மனோஜ் ரத்தோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிரியரை கைது செய்துள்ளனர்.