சென்னையை அடுத்த அண்ணா நகர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக அங்கு பணிபுரிந்துள்ளார். நேற்று அண்ணா நகர் பகுதியில் ராஜ்குமார் தனது காதலியுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சாகசம் செய்துள்ளார். இதனைப் பார்த்து பொது மக்கள் வியந்தனர். அதனை வீடியோவாக எடுத்து ராஜ்குமார் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், போன்ற சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவியது.

அது போலீசாரின் கவனத்திற்கும் சென்றது .இந்த நிலையில் போலீசார் ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தான் அந்த வீடியோவை ஒரு ஆண்டுக்கு முன்பு எடுத்ததாகவும், தற்செயலாக வெளியிட்டேன் எனவும் ராஜ்குமார்  கூறியுள்ளார். இருப்பினும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.