மும்பையில் வசித்து வரக்கூடிய பிரபல நடிகையான சுமன் குமாரி(24) போஜ்புரியில் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதோடு இந்தி, பஞ்சாபி மொழிகளிலும் ஆவணப் படங்களிலும்  நடித்துள்ளார். இந்த நிலையில் மாடல் அழகிகளை பாலியல் தொழிலில் தள்ளியதாக நடிகை சுமன் குமாரியை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடந்த 6 வருடங்களுக்கு மேல் மும்பையில் வசித்து வரும் சுமன் குமாரி மாடல் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்து உள்ளார். அதன்பின் நடிகை சுமன் குமாரியை கைது செய்த காவல்துறையினர் அவர் பிடியிலிருந்த மாடல் அழகிகள் 3 பேரை மீட்டனர்.