கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்மிக்க கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்கு 2003-ஆம் வருடம் உயரிய சாகித்ய அகாடமி விருதானது கிடைத்தது. மேலும் 23 மொழிகளில் மொழிப் பெயர்க்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதுவரையிலும் ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 7 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மதுரை அருகில் வைகை அணை கட்டியபோது காலி செய்யப்பட்ட 14 கிராம மக்கள் நடத்திய போராட்டமே இந்நாவலின் கதையாகும். இந்நிலையில் கள்ளிக்காட்டு நாவலை படமாக்கும் முயற்சிகளானது நடந்து வருகிறது.

இது திரைப்படமானால் ஆஸ்கார் போன்ற விருதுகள் பெறக்கூடிய சர்வதேச தரம் இக்கதைக்கு இருப்பதாக படக்குழுவினர் கருதுகின்றனர். இயக்குனர் விக்ரம் சுகுமாரன் கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலை படமாக எடுப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். கள்ளிக்காட்டு இதிகாசம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விக்ரமை நடிக்க வைப்பதற்கு பரிசீலனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிப்பது தொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.