
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் எப்படியாவது பிரபலமாகி விட வேண்டும் என்பதற்காக பலர் வித்தியாசமான செயல்களை செய்து வீடியோ வெளியிடுகின்றனர். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் நபர் ஒருவர் பாம்போடு விளையாடுகிறாரா அல்லது பாம்பின் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறாரா என குழப்பமாக உள்ளது. வழக்கமாக மலைப்பாம்புகள் தங்களுடைய இரைகளை உடலால் இறுக்கமாக சுற்றி வளைத்துக் கொள்ளும்.
அதனால் ஒருவரை மலைப்பாம்பு இறுக்கமாக சுற்றிக் கொண்டால் அவர் உயிர் பிழைப்பது கடினம் தான். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் தரையில் படுத்து இருக்கும் நபர் ஒருவரை மலைப்பாம்பு பின்னி பிசைந்து கொண்டிருக்கிறது. முதலில் இதனை பார்க்கும்போது நமக்கு ஆச்சரியமாக தான் உள்ளது. மலைப்பாம்பு பிடியிலிருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என அவர் முயற்சிப்பது போல நமக்கு தோன்றும். ஆனால் பாம்பு அவருடைய காலிலிருந்து தலைக்கு நகரும்போது அவர் சிரித்தபடி இருக்கின்றார். எனவே இந்த நபர் பாம்புடன் விளையாடிக் கொண்டிருப்பது தெரிகிறது. தற்போது இந்த வீடியோ வெளியாகி பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க