தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாஜக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடவுள்ள நடிகை ராதிகா சரத்குமாரின் மலைக்க வைக்கும் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி ராதிகாவின் அசையும் சொத்துகள் 27 கோடி, அசையா சொத்துகள் 26 கோடி , அவரது கணவர் சரத்குமாருக்கு அசையும் சொத்துகளாக 8 கோடி, அசையா சொத்துகளாக 21 கோடி ரூபாயும் உள்ளது. ராதிகா சரத்குமார் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை6 கோடி ரூபாயாகும். சரத்குமார் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை 8 கோடி ரூபாயாகும்.