நீதா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் தங்களது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமணத்திற்கு முந்தைய மூன்று நாள் பிரம்மாண்ட விருந்து நிகழ்ச்சியை நடத்தினர். திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் முகேஷ் அம்பானி 1260 கோடி செலவழித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி அணிந்திருந்த மரகத நெக்லஸ் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

மரகதம் மற்றும் வைர கற்கள் பதிக்கப்பட்ட இதன் விலை 500 கோடி ரூபாய் ஆகும். இது உலகின் மிக விலை உயர்ந்த நெக்லஸ்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. ஆடை வடிவமைப்பாளர் மணிஷ் மல்கோத்ரா வடிவமைத்த காஞ்சி புடவையில் 200 கோடி மதிப்பிலான வளையல் சகிதம் வெளியான அவரது படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.