தமிழகத்தில் மலக்கசட உள்ளிட்ட கழிவுகளை அப்புறப்படுத்தும் போது விதிகளை மீறினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கான பகுந்துரைக்கப்பட்டுள்ள விதிகளை திருத்தியும் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் கடந்த 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.மல கசடு மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் இரண்டு வருடங்கள் செல்லத்தக்க வாகன உரிமம் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும்.

அதற்காக 2000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். உரிமம் பெற்றவர் தவிர வேறு எந்த நபரும் கட்டடத்தில் இருந்து மலக்கசடு மற்றும் கழிவுகளைக் கொண்டு செல்வது போன்ற பணிகளில் ஈடுபடக் கூடாது . இதில் உரிமத்தாரர்கள் தவறு செய்தால் அது குறித்த புகார்களை தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விதிமீறல் ஏதாவது கண்டறியப்பட்டால் முதல் முறையாக செய்யும் தவறுக்கு 25 ஆயிரம் வரை அபராதமும் இரண்டாவது மற்றும் தொடர் குற்றங்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.