தமிழகத்தில் கல்வி முறைக்கு முக்கியத்துவம் வழங்கும் விதமாக பல்வேறு திட்டங்களை அரசு இந்த வருடம் அறிமுகம் செய்துள்ளது. அதே சமயம் அறிமுகம் செய்த திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியும் வருகின்றது. அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடிய தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மத்தியில் தமிழறிவு வளர்க்கும் விதமாக திறனறிவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் புதிய முயற்சியாக இன்று  ஜனவரி 6ஆம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொது நூலக இயக்ககம் சென்னை இலக்கியத் திருவிழா நடைபெற உள்ளது.

இந்த திருவிழா தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளை அறியும் வகையிலும் அதனை கொண்டாடும் விதமாகவும் நடத்தப்பட உள்ளது. இந்த விழா பள்ளி கல்வித்துறை சார்பாக ஜனவரி 6ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வகையான இலக்கிய போட்டிகள் நடைபெற உள்ளதால் சென்னையை சேர்ந்த அனைத்து கல்லூரி மாணவர்களும் இதில் பங்கேற்கலாம். இதில் விருப்பமுள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலமாக https://t.ly/8qC- என்ற பக்கத்தில் பதிவு செய்யுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.