ட்விஷா சர்மா மரண வழக்கின் விசாரணையில், சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நேரத்திற்கும், மரணம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நேரத்திற்கும் இடையே உள்ள மூன்று மணிநேர இடைவெளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி தொழில்நுட்பக் குழுவின் உரிமையாளர் வினோத் வானி, இந்த குளறுபடிக்கு முறையான பராமரிப்பு இல்லாததே காரணம் என்று விளக்கமளித்துள்ளார்.
மேலும் சிசிடிவி கேமராக்கள் சுமார் இரண்டரை ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாமல் இருந்ததாலும், அதன் பேட்டரி மற்றும் ஹார்ட் டிஸ்க் தொடர்பான தொழில்நுட்பக் கோளாறுகளாலும், பதிவுகளில் இரண்டு நாட்கள் மற்றும் இரண்டு மணிநேர கால இடைவெளி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
#NDTVExclusive | “Called to retrieve footage for cops, was told there was an accident” : Vinod Wani, CCTV firm owner speaks to NDTV’s @GargiRawat on the now viral CCTV footage from Twisha Sharma’s in-laws residence pic.twitter.com/8hGMXS9z51
— NDTV (@ndtv) May 22, 2026
“>
இந்த விவகாரத்தில், துவிஷாவின் குடும்பத்தினர் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். துவிஷாவின் மாமியார் கிரிபாலா சிங், இந்தச் சம்பவம் நடந்த உடனேயே செல்வாக்கு மிக்க அதிகாரிகளிடமும், தொழில்நுட்ப வல்லுநர்களிடமும் தொடர்பில் இருந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர். சிசிடிவி காட்சிகள் காவல்துறையிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டாலும், எஃப்.ஐ.ஆர் பதிவில் உள்ள மரண நேரத்திற்கும், சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நிகழ்வுகளுக்கும் உள்ள முரண்பாடு வழக்கின் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
