ஒடிசா மாநிலத்தில் அரசு சுகாதார நிறுவனங்கள் வழங்கும் மருத்துவ சேவைகளான நர்சிங், பார்மசி தொடர்பான அனைத்து மருத்துவர் படிப்புகளிலும் பயிலும் மாணவர்களுக்கு மாதம்தோறும் உதவித் தொகை வழங்கப்படும் நிலையில் அவரவர் படிப்புக்கு ஏற்றவாறு 500 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் D.Pharm பயிலும் மாணவர்களுக்கு 250 ரூபாய், ANM மாணவர்களுக்கு 2000 ரூபாய், மருத்துவ உளவியல் பயிலும் மாணவர்களுக்கு 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்துவதற்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.