
தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நபர்களில் ஒருவரான மயில்சாமி தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்தவர். இவருக்கு சில வருடங்களுக்கு முன்பே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையிலும் தொடர்ந்து சினிமாவில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தார். இவர் தீவிர சிவன் பக்தர் என்பதால் நேற்று முன்தினம் மகா சிவராத்திரியை கொண்டாட சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று இருந்தார். அங்கு சிறப்பு பூஜையில் ட்ரம்ஸ் சிவமணியை வரவழைத்து பாடல் பாடி அசத்தியுள்ளார்.
அதன் பிறகு அதிகாலை 3.30 மணிக்கு வீடு திரும்பிய இவர் சிவமணியிடம் தனது குடும்பத்தினரை வீட்டில் விட்டு விட்டு மறுபடியும் மற்றொரு கோவிலுக்கு வருவதாக கூறியுள்ளார். அதன் பிறகு காலை 4 மணிக்கு அவருக்கு பசி எடுத்த நிலையில் இட்லி சாப்பிட்டு உள்ளார். பின்னர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்றபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மயில்சாமியின் இறுதி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மயில்சாமியின் கடைசி இரவு!
கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் #Shivratri-ல் உடனிருந்த வீடியோவை பகிர்ந்து #DrumsSivamani உருக்கம்!
"@rajinikanth-ஐ இக்கோவிலுக்கு கூட்டிவந்து பாலாபிஷேகம் செய்ய வைக்க வேண்டும்" என #Mayilsamy தன்னிடம் கூறியதே அவர் கடைசிஆசை என #Sivamani சோகப்பகிர்வு! pic.twitter.com/Em9vEcYMd5
— i Tamil News | i தமிழ் நியூஸ் (@ITamilTVNews) February 19, 2023